Print this page

உணவு ஒவ்வாமையால் 42 பேர் வைத்தியசாலையில் 

மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்ஷ்பான தோட்டத்தை சேர்ந்த 42 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்றைய தினம் வழங்கப்பட்ட அன்னதானத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 7 குழந்தைகள் உள்ளிட்டவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உணவு ஒவ்வாமை சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.